தேவையான பொருட்கள்
பால் பவுடர் - 2 1/2 கப்
பால் -
தேவையான அளவு (கலப்பதற்கு)
நெய் (அ) டால்டா - 2 மேசைக்கரண்டி
சர்க்கரை
- 5 கப்
பேக்கிங்
பவுடர் - சிறிது
மைதா மாவு - 2 மேசைக்கரண்டி
நெய் (அ) எண்ணெய் - அரை
கப் (பொரிப்பதற்கு)
செய்முறை
- பால் பவுடருடன் மைதா மாவு, பேக்கிங்
பவுடர், நெய் (அ) டால்டா
சேர்த்து, தேவைக்கேற்ப பால் சேர்த்து பிசைந்து
கொள்ளவும்.
- பிசைந்த
மாவை சிறு உருண்டைகளாக உருட்டி
வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் 5 கப் சர்க்கரையைப் போட்டு,
அத்துடன் 5 கப் தண்ணீர் ஊற்றிக்
கரைத்து அடுப்பில் வைத்து ஒரு கம்பி
பதம் வரும் வரை பாகு
காய்ச்சவும்.
- மற்றொரு
அடுப்பில் வாணலியை வைத்து நெய்
அல்லது எண்ணெய் ஊற்றிக் காயவிடவும்.
காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப்
போட்டு சிவக்க பொரித்தெடுத்து சர்க்கரைப்
பாகில் போடவும். அனைத்து உருண்டைகளையும் போட்ட
பிறகு, 5 நிமிடங்கள் கழித்து பாகு இருக்கும்
அடுப்பை அணைக்கவும்.
- டேஸ்டி
குலாப் ஜாமுன் ரெடி. குறைந்தது
3 - 4 மணி நேரம் வரை குலாப்
ஜாமூன் பாகில் ஊற வேண்டும்.