தேவையான பொருட்கள்:
- கடலை மாவு – ½ கப்
- கோதுமை மாவு – ½ கப்
- அரிசி மாவு- 4 டேபிள் ஸ்பூன்
- பெரிய வெங்காயம் – 2
- பச்சை மிளகாய் – 4
- சோடா உப்பு – ½ டீ ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- ஆரஞ்சு புட் கலர் / கேசரி
பவுடர் – சிறிது
- மிளகாய்த்தூள் – ¼ டீ ஸ்பூன் (தேவைப்பட்டால்)
- கறிவேப்பிலை – 2 ஆர்க்கு
- எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
- ஒரு வெங்காயத்தை நீளவாக்கிலும், மற்றொன்றை பொடியாக சிறிய சதுர
துண்டுகளாகவும் நறுக்கிக்கொள்ளவும்.
- வெங்காயத்தை
இப்படி இரண்டு விதமாக நறுக்கிபோடும்போது
வடை நல்லா உருண்டையா போண்டா
போன்று உருட்டிபோட வரும்.
- பச்சை மிளகாயை மிகவும் பொடியாக
நறுக்கிக்கொள்ளவும்.
- கறிவேப்பிலையை
அலசி அதையும் பொடியாக நறுக்கி
வைத்துக்கொள்ளவும்.
- அரிசி மாவு,கோதுமை மாவு,கடலை மாவு மூன்றையும்
ஒன்றாக போட்டுக் கலக்கவும்.
- சோடா உப்பு, ஆரஞ்சு கலர்,
தேவையான அளவு உப்பு ஆகியவற்றை
மாவுடன் சேர்த்து கலக்கவும்.
- இதனுடன்
நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பிசறிவிடவும்.
- கொஞ்சம்
கொஞ்சமாக தண்ணி தெளித்து வடையாக
உருட்டி போடும் அளவிற்கு மாவை
பிசைந்து கொள்ளவும்.
- சற்று கெட்டியான மாவாக வைத்துக்கொண்டு எண்ணையில்
பொறித்து எடுக்கவும்.
- மாவில்
தண்ணி அதிகம் சேர்த்துவிட்டால் உருட்டிபோட
வராது.
- எண்ணையும்
அதிகமாக உறிஞ்சும். பிசைந்த மாவில் உப்பு,
காரம் சரியாக உள்ளதா என
பொரிக்கமுன் ஒருமுறை பார்த்துக்கொள்ளவும்.
- தேவைப்பட்டால்
மேலும் சிறிது உப்பும்,மிளகாய்த்தூளும்
சேர்த்து பிசைந்து கொள்ளவும். வானலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கவும்.
- ஒரே மிதமான வெப்பத்தில் சீராக
வைத்து வடைகளாக போட்டு பொரித்து
எடுக்கவும்.
Labels: snakes