சிக்கன் 65

தேவையான பொருட்கள்
சுத்தம் செய்த கோழிக் கறி                         1/2 கிலோ
இஞ்சி சிறு துண்டாக நறுக்கியது       5
உரித்த வெள்ளைப்பூண்டு பல்               7
தனி மிளகாய்ப் பொடி                                     3 ஸ்பூன்
மஞ்சள் பொடி                                                         1/2 ஸ்பூன் 
கேசரி பவுடர் (ஆரஞ்சு)                                 1சிட்டிகை
கட்டித் தயிர்                                                              1/4 கப்
உப்பு தேவையான அளவு
பொறித்தெடுக்கத் தேவையான எண்ணெய்

தயார் செய்யும் முறை
·         இஞ்சி , வெள்ளைப்பூண்டு இரண்டையும் மிக்சியில் நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
·         அரைத்த விழுதை சுத்தம் செய்த கோழிக் கறியாடு சேர்த்து மேலும் மிளகாய்ப் பொடி , மஞ்சள் பொடி , கலரு்காக கேசரிப் பொடி மற்றும் தயிர் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசறி ஒரு மணி நேரம் ஊர வைக்க வேண்டு்ம்.
·         அடுப்பில் வடை சட்டியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பிசறி வைத்த கோழிக் கறியை மிதமான சூட்டில் பொறித்தெடுக்க வேண்டும்.
·         சூப்பரான சிக்கன் 65 ரெடி.
·         நறுக்கிய எலுமிச்சை துண்டுகள் , வட்டமாக வெட்டிய பெரிய வெங்காயம் இவற்றோடு சேர்த்து பறிமாறவும்.


Labels: