தேவையான பொருட்கள்
- மைதா மாவு -200 கிராம்
- பேக்கிங் பவுடர் -2 டீஸ்பூன்
- சர்க்கரை – 150 கிராம்
- வெண்ணெய் -100 கிராம்
- முட்டை- 2
- வாழைப் பழம் – 2
- பால் – 50 மில்லி
செய்முறை
- மைதா மாவு, பேக்கிங் பவுடர்,
இரண்டையும் கலந்து மூன்று முறை
சலிக்கவும்.
- முட்டைகளை
நுரைக்க அடிக்கவும். வாழைப்பழத்தைப் பிசைந்து பாலுடன் நைசாக அரைத்துக்
கொள்ளவும்.
- வெண்ணெய்,
சர்க்கரை சேர்த்து நன்கு லேசாகும் வரை
குழைக்கவும்.
- சலித்த
மாவில் வெண்ணெய் சர்க்கரை குழைத்த கலவை, நுரைக்க
அடித்த முட்டை, அரைத்த வாழைப்பழ
விழுது இவற்றைச் சேர்த்து விரல்களாலேயே மிருதுவாக கலக்கவும்.
- பேக்கிங்
ட்ரேயில் வெண்ணெயைத் தடவி மாவு தூவி,
கேக் கலவையை அதில் ஊற்றி
பேக் செய்யவும்.
Labels: cake