தேவையான பொருட்கள்:
1.
புளித்த மோர் – 500 மி.லி
2.
வெண்டைக்காய்
– 10 எண்ணம்
3.
கடலைப்பருப்பு
- 25 கிராம்
4.
வெந்தயம்
– 1/2 தேக்கரண்டி
5.
மல்லித்தூள்
– 1 தேக்கரண்டி
6.
மிளகாய் வற்றல் – 4 எண்ணம்
7.
அரிசி – 1
தேக்கரண்டி
8.
தேங்காய்த்
துருவல் - 2 தேக்கரண்டி
9.
கடுகு –
1/2 தேக்கரண்டி
10.
வெந்தயம்
– 1/4 தேக்கரண்டி
11.
எண்ணெய் –
தேவையான அளவு
12.
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
·
கடலைப்பருப்பு,
மல்லி, மிளகாய்
வற்றல், வெந்தயம்
ஆகியவற்றை எண்ணெய்
விட்டு வறுக்கவும்.
·
வறுத்தவைகளுடன்
தேங்காய் துருவல்,
அரிசி சேர்த்து
மிக்ஸியில் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
·
அரைத்த விழுதை ஒரு
பாத்திரத்தில் மோருடன் கலந்து தேவையான அளவு
உப்பு சேர்க்கவும்.
·
வெண்டைக்காய்களைத்
துண்டுகளாக நறுக்கி, எண்ணெய் விட்டுப் பொன்னிறமாக
வதக்கவும்.
·
வதக்கியவற்றைக்
கலந்து வைத்து
இருக்கும் மோருடன்
சேர்க்கவும்.
·
இதை மிதமான தீயில்
சுட வைத்து
இலேசாக கொதித்ததும்
இறக்கவும்.
·
வாணலியில்
எண்ணெய் ஊற்றிக்
காய்ந்ததுதும், அதில் கடுகு, வெந்தயம் தாளித்துச்
சேர்க்கவும்.